போராட்டக்களமாக மாறிய லண்டன்: கோழை, ஓடாதே தெரசா மே-வை பார்த்து கோஷமிட்ட மக்கள்

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள Grenfell Tower என்ற அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய் கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் 17-பேர் பலியாகியிருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து 100-பேர் பலியாகியிருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக பொலிசார் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

விபத்தில் சிக்கி பலியான 17-பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் காணமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே வேளை விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது மிகவும் சிரமம் எனவும் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட சென்ற பிரதமர் தெரசா மே, அங்கிருந்த மக்களை பார்க்காமல் சென்றுள்ளார். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விபத்திற்காக தெரசா மே 5 மில்லியன் பவுண்ட் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், இந்த விபத்து எப்படி நடந்து என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு தனிக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தெரசா மே ஒதுக்கிய நிதி போதாது, எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று லண்டனில் உள்ள Kensington மற்றும் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

நூற்றுக்கணக்கில் ஆரம்பித்த இப்போராட்டம் அடுத்தடுத்து சென்று ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டமாக மாறியது. Grenfell Towe-ல் ஏற்பட்ட கட்டிட விபத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

அதற்கு விசாரணை நடந்தால் ஒரு சில ஆண்டுகள் ஆகும் என்பதால், எங்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்து போராடினர்.

அப்போது தெரசா மே அங்குள்ள St Clements தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.

இதை அறிந்த போராட்டக்காரர்கள் தேவாலயத்தை சுற்றி வளைத்து, அவரிடம் பேசுவதற்காக காத்திருந்தனர். ஆனால் அவரோ அவர்களிடம் பேசாமல், தேவாலயத்தின் பின் புற வாசலில் சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் நாங்கள் வீடின்றி தவிக்கிறோம், நீ சொகுசாக சென்று உறங்கிவிடுவாய் என்று கோஷமிட்டனர்.

மேலும் கோழை, பயந்தாங்கொள்ளி, ஓடாதே, தைரியம் இருந்தால் எங்களை நேரில் சந்தித்துச் செல் என்று ஒரு சிலர் கோஷமிட்டனர்.

இதனால் பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது பொலிசார் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments