லண்டனில் தேம்ஸ் நதி அருகே பயங்கர சத்தத்துடன் வானவேடிக்கை!

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

லண்டனில் தேம்ஸ் நதி அருகில் பயங்கர சத்தத்துடன் வானவேடிக்கை கொண்டாட்டத்தில் வெடிகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து நகர மக்கள் ஒருவித அச்சத்துடன் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்றிரவு 10.45 மணியளவில் மத்திய லண்டனில் உள்ள தேம்ஸ் நதி அருகில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து Arif என்ற இளைஞர் தனது டுவிட்டர் பக்கத்தில், வானவேடிக்கை அருமையாக இருந்தது.

ஆனால் திடீரென ஏற்பட்ட சத்தத்தை வைத்து நேஷனல் திரையரங்கில் இருந்தவர்கள் துப்பாக்கி சூடு நடப்பதாக நினைத்து பயந்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.

Ella என்ற பெண் டுவிட்டரில், மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது, எதிர்பாராதவிதமாக வானவேடிக்கை நிகழ்வுகள் நடந்துள்ளது என கூறியுள்ளார்.

Ian Maclure என்ற நபர் கூறுகையில், மிகப்பெரிய வானவேடிக்கை நிகழ்வில் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு பலர் உறைந்து போனார்கள் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments