பாதசாரிகள் மீது பாய்ந்த வாகனம்: லண்டனில் மீண்டும் பரபரப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

லண்டனின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மசூதி அருகே பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று பாய்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டுமின்றி இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

தற்போது சம்பவம் நடந்த பகுதியில் பதுகாப்பு கருதி ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மசூதியில் லமலான் நோம்பு துறக்கும் வேளையில் இந்த வெள்ளை நிற வாகனம் பாதசாரிகள் மீது பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில், 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் எனவும் இது ஒரு இனவாத தாக்குதல் என தற்போதைய சூழலில் அறிவிக்க முடியாது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கைதான நபரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments