தீப்பற்றி எரிந்த மருத்துவமனை கட்டிடம்: அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவின் Surrey கவுண்டியில் அமைந்திருக்கும் மூன்று மாடிகள் கொண்ட Weybridge மருத்துவமனையில் நேற்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு உடனடியாக வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினார்கள்.

இதற்காக 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருவதாகவும், சில மணிநேரத்துக்கு அவர்கள் அங்கு தான் இருப்பார்கள் எனவும் தீயணைப்பு துறை டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.

இந்த மருத்துமனைக்குள் நோயாளிகள் பகல் நேரத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

மருத்துவமனையின் அருகில் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றபட்டு St James Parish தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Matt என்பவர் கூறுகையில், நேற்றிரவு 11.45 மணியளவில் என் மனைவி தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி அருகிலிருக்கும் Weybridge மருத்துவமனை தீப்பற்றி எரிவதாக கூறினார்.

ஜன்னல் வழியாக நான் பார்த்த போது மக்கள் கத்திக் கொண்டு இருந்தார்கள். உடனடியாக நாங்கள் கீழே சென்று ஏதாவது உதவி செய்ய முடியுமா என பார்த்தோம்.

மருத்துவமனையின் மேல் மாடி 40 நிமிடத்தில் முற்றிலுமாக எரிந்து விட்டது, தீப்பிழம்புகளை மட்டுமே பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

தீப்பற்றி எரியும் கட்டிடத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பலர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments