அலர்ஜி உணவால் பறிபோன உயிர்: பள்ளி மாணவன் மரணத்தில் திருப்பம்

Report Print Fathima Fathima in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மாணவர் இறந்து போனது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தின் கிரீன்போர்டில் வில்லியம் பெர்கின் உயர்நிலைப்பள்ளி உள்ளது, இப்பள்ளியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கரன்பீர் சீமா 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

கரன்பீருக்கு பால் சார்ந்த பொருட்கள் என்றாலே அலர்ஜி, இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கும் தெரியும்.

இந்நிலையில் கடந்த மாதம் 28ம் திகதி கரன்பீர் பள்ளிக்கு சென்றுள்ளார், மதிய உணவு இடைவேளை முடிந்த பின்னர் வகுப்புகள் தொடங்கிய போது திடீரென கரன்பீருக்கு உடல்நிலை மோசமாகி போனது.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்து கரன்பீருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 9ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் துடிதுடித்துப் போன கரன்பீரின் பெற்றோர், தங்கள் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சுமத்தினர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஸ்காட்லாந்து பொலிசார் விசாரணை நடத்தியதில், கரன்பீருக்கு வலுக்கட்டாயமாக பால் சார்ந்த உணவு பொருட்கள் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கரன்பீருடன் படித்த மற்றொரு மாணவனை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே பள்ளியின் வலைத்தளத்தில், இந்திய மாணவனின் இறப்புக்கு அலர்ஜி தான் காரணம், எனவே ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments