குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடும் பெற்றோர்: நீதிமன்றம் வழங்கியுள்ள சந்தர்ப்பம்

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bedfont பகுதியைச் சேர்ந்த தம்பதி Chris Gard(32)-Connie Yates(31). இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை(charlie) பிறக்கும் போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்துள்ளது. அதுமட்டுமின்றி மூளை சேதமும் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து குழந்தைக்கு லண்டனில் உள்ள Great Ormond Street மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் குழந்தையின் விடயத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் மருத்துவமனை சார்பில் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதில் குழந்தைகளின் பெற்றோரான Chris Gard-Connie Yates ஆகியோர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் Experimental nucleoside therapy மேற்கொள்ளவுள்ளனர்.

ஆனால் அந்த சிகிச்சையின் பயனாய் குழந்தைக்கு எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில், இறுதியாக நீதிபதிகள் பெற்றோருக்கு எதிராக தீர்ப்பு வழங்கினர். இதனால் அவர்கள் லண்டனில் உள்ள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்னும் இரண்டு நாட்களில் அமெரிக்காவில் குழந்தைக்கு மேற்கொள்ளவிருக்கும் Experimental nucleoside therapy பற்றி தொடர்பான புதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சமர்பிக்கப்படும் ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தால், இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments