விலைமாது பெண்ணிற்காக மனைவியை கொல்ல முயன்ற கணவன்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய நாட்டில் விலைமாது பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதற்காக மனைவியை கொல்ல திட்டமிட்ட கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள சஸ்சக்ஸ் நகரில் டேவிட் ஹரிஸ்(68) என்பவர் தனது கோடீஸ்வரி மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

இங்கிலாந்தில் ஒளிப்பரபான 'The Bill’ என்ற நிகழ்ச்சியை டேவிட் தயாரித்து வழங்கி வந்துள்ளார்.

டேவிட்டின் மனைவி 27 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததால் அவரது இல்லற வாழ்க்கை சோகத்தில் தத்தளித்தது.

இந்நிலையில், 28 வயதான விலைமாது பெண் ஒருவருடன் டேவிட்டிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் காதலாக மாறியதை தொடர்ந்து சுமார் 50 ஆயிரம் பவுண்ட் வரை விலைமாது பெண்ணிற்கு செலவு செய்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், மனைவி கொலை செய்துவிட்டு விலைமாது பெண்ணுடன் சேர்ந்து வாழவும் டேவிட் முடிவு செய்துள்ளார்.

மனைவியை கொலை செய்வதன் மூலம் அவருடைய 8,00,000 பவுண்ட் மதிப்புள்ள வீடு உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும் தன்வசம் கிடைக்கும் என்ற திட்டத்தையும் டேவிட் தீட்டியுள்ளார்.

மனைவியை நேரடியாக கொலை செய்யாமல் பணத்திற்காக இந்த குற்றத்தை செய்து வரும் இருவரை அணுகி தனது திட்டத்தை தெரிவித்து 2,00,000 பவுண்ட் தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.

ஆனால், டேவிட்டின் திட்டத்திற்கு உடன்படாத இருவரும் அவரை உண்மைகளை பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

டேவிட்டின் திட்டத்தை அறிந்துக்கொண்ட பொலிசார் ஒரு அதிகாரியை நிழல் உலக தாதாவாக அனுப்பியுள்ளனர்.

பொலிசாரின் திட்டத்தை அறியாத டேவிட் அந்த அதிகாரியிடம் மனைவியை கொலை செய்ய அணுகியபோது கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று டேவிட் மீது இறுதி விசாரணை நடைபெற்றுள்ளது.

மனைவியை கொல்ல முயன்றது, அவரது சொத்துக்களை அபகரிக்க திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக டேவிட்டிற்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments