லண்டனில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து: கடுமையாக போராடும் தீயணைப்பு வீரர்கள்

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

லண்டனில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய லண்டனில் உள்ள Marble Arch என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் தான் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

advertisement

இங்கிலாந்து நேரப்படி காலை 10.49 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Edgware சாலையில் அமைந்துள்ள இந்த 6 அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தீயை அணைப்பதற்காக வீரர்கள் 6 குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் இப்பகுதியில் தீ விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments