பிரித்தானியாவில் திருமணம் செய்த முஸ்லிம் ஓரினச் சேர்க்கையாளர்கள்! தெருவில் நடந்தால் நடப்பது வேறு என மிரட்டல்

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

பிரித்தானியாவில் முஸ்லிம் ஓரினச்சேர்க்கையாளர்காளான Jahed Choudhury(24) மற்றும் Sean Rogan(19) ஆகியோர் கடந்த வாரம் Walsall Registry அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இரண்டு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டனர்.

advertisement

அப்போது அவர்கள் நாங்கள் முஸ்லிமாகவும், ஓரினச் சேர்க்கையாளராகவும் இருந்து இந்த உலகத்திற்கு வாழ்ந்து காட்டுவோம் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் Jahed Choudhury, சமூகவலைத்தளங்களில் சில மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார். அதில் உன்னை தெருவில் பார்த்தால் உன் முகத்தில் அசிட்டை அடித்து விடுவோம் என்று மிரட்டப்படுகிறது.

நான் தெருவில் நடந்து சென்றால் சிலர் எச்சில் உமிழ்கின்றனர், ஒரு சிலர் மோசமான வார்த்தைகளால் திட்டுகின்றனர், நீ முஸ்லிமாக இருக்க முடியாது என்று கூறுகின்றனர்.

எனினும் இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. ஆனால் பரிசீலித்து வருவதாக கூறினார்.

இதே வேளையில் பெரும்பாலானோர் சமூகவலைத்தளங்களில் எங்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர், ஒரு சிலர் நீங்கள் தான் முன்னுதாரணம் என்று கூட கூறி வருகின்றனர்.

இது என்னுடைய வாழ்க்கை நான் தான் தேர்ந்தேடுப்பேன், அதில் எப்போதும் நான் பின் வாங்கமாட்டேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments