தாயின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுவன்: மனதை உருக்கும் சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

நினைவிழந்த நிலையில் தரையில் மயங்கி கிடந்த தாயின் நிலை குறித்து அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து தாயை காப்பாற்றிய சிறுவனின் செயல் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள Bridgend நகரை சேர்ந்தவர் Nicola Jenkins (34) இவரது மகன் Kyran Duff (5).

கடந்த பிப்ரவரியில் Kyranஐ பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப அவன் தாய் Nicola பரபரப்பாக வீட்டில் இயங்கி கொண்டிருந்தார்.

அப்போது, விட்டின் மாடி படியிலிருந்து கீழே இறங்கிய போது Nicola மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதை கண்ட சிறுவன் Kyran தனது தாயை காப்பாற்ற சமயோஜிதமாக செயல்பட்டுள்ளான். அதாவது உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு Kyran போன் செய்துள்ளான்.

தாய் மயங்கி விழுந்துள்ளது குறித்து அதிகாரியிடம் Kyran கூறியுள்ளான். போனில் பேசிய அதிகாரி உன் தாயால் உன்னிடம் பேச முடிகிறதா என கேட்டுள்ளார்.

அதற்கு இல்லை என Kyran கூறியுள்ளான். பிறகு, உன் அம்மாவின் மீது ஒரு போர்வையை போர்த்து என அதிகாரி சிறுவனிடம் கூற தான் ஏற்கனவே அதை செய்து விட்டதாக Kyran கூறியுள்ளான்.

பிறகு நினைவில் வைத்திருந்த தனது வீட்டு முகவரியை சரியாக Kyran அவசர உதவி அதிகாரியிடம் கூறியுள்ளான்.

அப்போது, Kyran வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. வீட்டின் சாவி Kyranக்கு எட்டாத உயரத்தில் இருந்துள்ளது.

ஆனால், Kyran தனது தந்தையின் செருப்பை வைத்து எகிறி குதித்து புத்திசாலிதனமாக சாவியை மேலிருந்து எடுத்து கதவை திறந்துள்ளான்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர், மயங்கி கிடந்த Nicolaக்கு அவசர சிகிச்சையளித்து உயிரை காப்பாற்றியுள்ளார்கள்.

இந்த சம்பவம் தற்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது.

Kyran-க்கு தைரியமாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் Laverick விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து Nicola கூறுகையில், எனக்கு வலிப்பு அறிகுறி இருப்பதாக ஏற்கனவே மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன்.

இது போல எதாவது சம்பவம் நடக்க வாய்ப்பு இருக்கும் என முன்னரே தெரிந்து தான், Kyranக்கு வீட்டு முகவரியை சொல்லி கொடுத்து ஆபத்து நேரத்தில் அவசர உதவியை அழைப்பது குறித்தும் ஏற்கனவே சொல்லி கொடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments