மூதாட்டியின் கண்ணில் சிக்கிய 27 கான்டாக்ட் லென்ஸ்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் கண்புரை அறுவை சிகிச்சைக்காகச் சென்ற மூதாட்டியின் கண்ணில் இருந்து சுமார் 27 கான்டாக்ட் லென்ஸ்களை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்ஹாம் நகரில் உள்ள சோலிஹுல் கண் மருத்துவமனைக்கு 67 வயது மூதாட்டி ஒருவர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அவர் கடந்த 35 ஆண்டுகளாக, கான்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு கண் எரிச்சல், வீக்கம், கண்ணில் இருந்து நீர் வருவது, தாங்கமுடியாத வலி ஏற்படுவது போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மூதாட்டியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய கண்ணில் சுமார் 17 கான்டாக்ட் லென்ஸ்கள் ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதை அறுவைசிகிச்சைமூலம் அகற்றிய மருத்துவர்கள் மீண்டும் பரிசோதனை செய்ததில் மேலும் 10 லென்ஸ்கள் ஒட்டிக்கொண்டு காணப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த லென்ஸ்களும் அகற்றப்பட்டன.

தற்போது அந்த மூதாட்டிக்குக் கண் பார்வை தெளிவாக உள்ளதாகவும் எந்தவித கண் பிரச்னையுமின்றி காணப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த இந்த நிகழ்வினை பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் பத்திரிகை தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments