அண்டார்டிகாவில் முதன் முதலாக திருமணம்: பிரித்தானியா ஜோடியின் புகைப்படங்கள்

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

அண்டார்டிகாவின் உறைபனியில் முதன் முறையாக பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோடி திருமணம் செய்துள்ளனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோடி டாம் சில்வஸ்டர்-ஜுலி. இவர்கள் தங்கள் திருமணத்தை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளனர்.

இதனால் இவர்கள் அண்டார்டிகாவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பிரித்தானியா அரசிடம் கோரிக்கை வைத்த அவர்களுக்கு அரசும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவின் ஆய்வுப் பகுதியான ரோதேரா ஆய்வுநிலையம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற இந்த ஜோடி உறைபனியில் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களது திருமணத்தில் அண்டார்டிகா கண்டத்துக்கு சுற்றுலா சென்ற 20 ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

உலகில் முதன் முறையாக இவர்கள் தான் அண்டார்டிக்காவில் திருமணம் செய்து கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments