முஸ்லிம்களை கொல்ல வேண்டும்: லண்டனில் அராஜகம் செய்த நபருக்கு ஏற்பட்ட நிலை

Report Print Basu in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

பிரித்தானியாவில் முஸ்லிம்களை கொல்ல வேண்டும் எனக் கூறி இஸ்லாமிய புத்தகக்கடையை தகர்த்து விடுவேன் என மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள புத்தகக்கடையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 39 வயதான டேவிட் மொப்பாட் தானாக பொலிஸிற்கு அழைப்பு விடுத்து சிக்கியுள்ளார்.

advertisement

கடந்த மே 23ம் திகதி Brent Cross அருகில் உள்ள கிறிக்ளிவுட் இஸ்லாம் புத்தகக்கடைக்குள் நுழைந்த டேவிட் கடையில் உள்ள நபர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வன்முறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர், அதே நாள் பொலிசாருக்கு அழைப்பு விடுத்த டேவிட், தன்னை சிலர் மிரட்டுவதாக கூறியுள்ளார். சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் டேவிட்டை கைது செய்துள்ளனர்.

பொலிசார் விசாரணையில் நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் இல்லை, நான் கத்தோலிக்கன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் வில்லென்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டேவிட்க்கு, 12 மாதங்களுக்குள் 100 மணி நேரத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என ஒரு சமூக ஒழுங்கிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 705 பவுண்ட் அபரதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்