லண்டனில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவங்கும் சேவை

Report Print Santhan in பிரித்தானியா
335Shares
335Shares
lankasrimarket.com

லண்டனில் கடந்த 1927-ஆம் ஆண்டு தபால்களையும், பார்சல்களையும் கொண்டுசெல்ல துவங்கப்பட்ட இரயில் சேவை, கடந்த 2003-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

தற்போது இந்த இரயில் சேவை 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவங்க உள்ளது. இந்த ரயில் சேவை மேம்படுத்தப்பட்டு பொதுமக்களும் பயணிக்கும் வகையில் இயக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் மேற்கு பகுதியான பேடிங்டன்னிலிருந்து கிழக்கு பகுதியான வொயிட்சேப்பல் வரை 6.5 மைல் தூரத்துக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது எனவும் இப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்களை 15 நிமிடத்தில் சென்றடைய சுற்றுலா பயணிகளுக்கு இது பயன்படும் எனவும் கூறப்படுகிறது.

ஆளில்லாமல் மின்சாரம் மூலம் இயக்கப்பட்டு வந்த இந்த இரயில் தற்போது பயணிகள் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்