இறந்த உறவினர்களின் உடல்களை தின்ற பிரித்தானியர்கள்: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
351Shares
351Shares
lankasrimarket.com

பழங்கால பிரித்தானியர்கள் நரமாமிசம் உண்ணுபவர்களாகவும் தங்களது இறந்த உறவினர்களின் உடல்களை தின்றுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் சோமர்செட் பகுதியில் உள்ள தில்லுயிரியலாளர்கள் இது குறித்த ஆய்வு ஒன்றில் மேற்குறிப்பிட்ட தகவலை கண்டறிந்துள்ளனர்.

சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் குகைகளில் வாழ்ந்த பழங்கால பிரித்தானியர்கள் தங்களது உறவினர்கள் எவரேனும் உயிரிழந்தால் அந்த உடல்களை வைத்து ஒருவகையான வழிபாட்டை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

இதுபோன்ற ஒரு வழிபாட்டு முறையை உலகில் பழங்கால பிரித்தானியர்கள் மட்டுமே மேற்கொண்டு வந்ததாக குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் மற்றும் மிருகங்களின் எலும்புகளில் குறிப்புகள் எழுதப்பட்டிருந்ததும் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

மட்டுமின்றி கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்பு ஒன்று சிதைக்கப்பட்டு, வடிகட்டி பின்னர் வித்தியாசமான மொழியால் குறிப்பு எழுதப்பட்டிருப்பதும், அந்த எலும்பானது உடைக்கப்பட்டிருப்பதும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அந்த குறிப்புகளானது இறந்த உறவினர்களின் வாழ்க்கை அல்லது அவர் இறந்ததன் காரணமாக இருக்கலாம் என தொல்லுயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்