லண்டனில் பாரிய பஸ் விபத்து: பலர் காயம்

Report Print Vethu Vethu in பிரித்தானியா
363Shares
363Shares
lankasrimarket.com

லண்டனில் பிரபல வீதியில் இடம்பெற்ற பாரிய பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இரண்டு தட்டு பஸ் ஒன்று அந்த தெருவில் கடையொன்றை உடைத்து உள்ளே சென்றுள்ளமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த கடைக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சமையலறை கண்ணாடி வடிவமைப்பு கடையொன்றை உடைத்துக் கொண்டே இந்த பஸ் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று காலை தெற்கு லண்டனில், Battersea பகுதியின் Clapham சந்திக்கு அருகில் Lavender Hill என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மூன்று தீ மீட்பு பிரிவுகள் தற்போது வரையில் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களுக்கமைய அந்த பஸ் வண்டி குறித்த கடையை நெருக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பஸ் வண்டியின் சாரதி தெற்கு லண்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பயணிகள் பஸ் வண்டியின் மேல் தளத்தினுள் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் இந்த சம்பவத்தினால் பெரிய ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தான் நம்புவதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்திற்கான காரணம் மற்றும் விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் தங்களுக்கு தெரியவரவில்லை என லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்