மனித கழிவுகள் நிரம்பிய தண்ணீரில் நீச்சல் அடித்த முன்னாள் பிரித்தானிய பிரதமர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1221Shares
1221Shares
lankasrimarket.com

பிரித்தானியாவின் கார்ன்வால் பகுதியில் மனித கழிவுகள் நிரம்பியுள்ள Polzeath கடற்கரையில் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நீச்சல் அடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கார்ன்வால் பகுதியில் உள்ள குறித்த கடற்கரை பகுதியானது மனித கழிவுகள் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் அப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அந்த கடற்கரையில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நீச்சலிடித்துள்ளது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் குறித்த கடற்கரை பகுதியானது டேவிட் கேமரூன் குடும்பத்தாருக்கு மிகவும் பிடித்தமான பகுதியாக இருக்கலாம் என அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே முன்னாள் பிரதமர் கேமரூன் தமது இரு குழந்தைகளுடன் அப்பகுதியை விட்டு சென்ற பின்னர், தண்ணீர் மாசுப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கை பதாகையை காவலர்கள் சிலர் அப்பகுதியில் நாட்டியுள்ளனர்.

கேமரூன் மட்டுமல்ல அந்த கடற்கரையில் ஏராளமானோர் குளித்து வந்துள்ளதாகவும், எச்சரிக்கை பதாகையை பார்ப்பவர்கள் அங்கு குளிப்பதை தவிர்க்கலாம் எனவும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒருமணி நேரத்துக்கும் மேலாக தமது குழந்தைகளுடன் டேவிட் கேமரூன் அந்த மாசுபட்ட தண்ணீரில் நீச்சலடித்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்