ஸ்காட்லாந்து அருங்காட்சியகத்தில் கத்தை கத்தையாக அவுஸ்திரேலியா பணம்: மர்ம நபருக்கு வலைவீச்சு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
171Shares
171Shares
lankasrimarket.com

ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஒன்றில் அவுஸ்திரேலிய டொலர் நிரப்பிய பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பிக்கார் பகுதி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கத்தை கத்தையாக நிரப்பப்பட்ட அவுஸ்திரேலிய பணம் எவருடையது என்பதை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என பொலிசார் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அந்த பகுதியிலேயே மிகவும் சிறிய அருங்காட்சியம் இது. ஆனால் பணத்துக்கு உரிமையாளர் மறந்து விட்டு சென்றாரா அல்லது திட்டமிட்டே இது நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணையின் முடிவிலேயே தெரிய வரும் என பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

பணப்பெட்டியை திருப்பித் தரும்போது கண்டிப்பாக அதன் உரிமையாளரின் முகத்தில் சிரிப்பை பார்க்கமுடியும் என பொலிசார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதுவரை பலமுறை பணத்தின் உரிமையாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனால் சமூக வலைதளத்தின் வாயிலாக உரிமையாளரை தொடர்புகொள்ள முடியுமா என பொலிசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

பணத்தை தொலைத்தவர்கள் உரிய ஆவணங்களுடன் பொலிசாரை அணுகினால் பணப்பெட்டியை திருப்பித்தர காத்திருப்பதாக பிக்கார் பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்