எலிசபெத் மகாராணி மரணித்தால் பிரித்தானியா கடவுச்சீட்டில் என்ன மாறுதல் வரும்?

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

பிரித்தானியா கடவுச்சீட்டுகள் தற்போது எலிசபெத் மகாராணியின் அரசாட்சியின் கீழ் தான் வழங்கப்படுகிறது.

எலிசபெத் மகாராணி உயிரிழந்த பின்னர் அதன் மூலம் அவர் பெயரிலான அரசாட்சி மாறினால் பிரித்தானியா கடவுச்சீட்டுகளில் சில திருத்தங்கள் செய்யப்படும்.

advertisement

கடந்த 1952ல் எலிசபெத் மகாராணியின் தந்தை George VI உயிரிழந்து அரசாட்சி அதிகாரம் மகாராணிக்கு வந்த பின்னர் பிரித்தானியா கடவுச்சீட்டில் மாறுதல் ஏற்படுத்தப்பட்டது.

தற்போதைய கடவுச்சீட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளில் மகாராணி பெண் என்பதை குறிக்கும் வகையில் Her என இடம்பெற்றிருக்கும்.

இதுவே வருங்காலத்தில் சார்லஸ் தலைமையேற்றால் பிரதிபெயரானது அவர் ஆண் என்பதை குறிக்கும் வகையில் His என மாற்றப்படும்.

சார்லஸ் அரசாட்சி ஏற்பட்டால், மகாராணியின் குறிப்புகளை கொண்ட கடவுச்சீட்டுகள் செல்லாது என அர்த்தமில்லை.

அதை புதுப்பிக்க மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும். பழைய நாணயங்கள், பவுண்டுகள் தடை செய்யப்பட்டு புது நாணயங்கள், பவுண்டுகள் அறிமுகம் செய்யப்பட்டால் எப்படி பழையது தீரும் வரை அதை பயன்படுத்துவோமோ அது போல தான் கடவுச்சீட்டு விடயத்திலும் செய்யப்படும்.

இந்த காரணத்தோடு, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக விலகிய பின்னரும் கடவுச்சீட்டில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்