பிரித்தானியாவின் முக்கிய தொழிற்பேட்டையில் பெருந்தீ விபத்து

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவின் Essex பகுதியில் அமைந்துள்ள முக்கிய தொழிற்பேட்டையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர கடுமையாக போராடி வருகின்றனர்.

தீ விபத்தால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் Braintree பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களை ஜன்னல் மற்றும் கதவுகளை மூட எச்சரித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்தும் பொருட்டு தீயணைப்பு துறையின் 7 குழுக்கள் தற்போது களமிறக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கடுமையாக போராடி வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

குறித்த தொழிற்பேட்டையானது 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தீ விபத்தின் காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் அடுத்த இரண்டு பகுதிக்கு தீ பரவாத வகையில் தீயணைப்பு குழுவினர் போராடி வருவதாக கூறப்படுகிறது.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்