தீப்பிடித்த சோனி செல்போனால் நபருக்கு நேர்ந்த விபரீதம்: லட்சக்கணக்கில் நஷ்டஈடு கேட்டு வழக்கு

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

சோனி நிறுவனத்தின் செல்போன் தீப்பிடித்தில் நபரின் கைவிரல்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில், குறித்த நிறுவனம் தனக்கு 8,28,540 ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரித்தானியாவின் Bedford நகரை சேர்ந்தவர் Tom Collins (36) இவர் சோனி நிறுவனத்தின் Xperia Z2 மொடல் செல்போனை உபயோகப்படுத்தி வந்தார்.

மூன்று மாதத்துக்கு முன்னர், போனிலிருந்து தனது காதலிக்கு அவர் மெசேஜ் அனுப்பிய போது திடீரென போன் தீப்பிடித்து வெடித்தது.

உடனடியாக அருகிலிருந்த தண்ணீரை போன் மீது ஊற்றி Tom தீயை அணைத்தார்.

இரண்டு கைகளிலும் பலத்த தீக்காயம் அடைந்த Tom உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

மூன்று மாத சிகிச்சைக்கு பின்னர் Tom-ன் எல்லா விரல்களிலும் கட்டு போடப்பட்டுள்ளது. அதோடு அவரின் வலது கை விரல்கள் உணர்ச்சியை இழந்துள்ளன.

இந்நிலையில், சோனி நிறுவனம் தனக்கு நஷ்டஈடாக 8,28,540 ரூபாய் கொடுக்க வேண்டும் என Tom வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து Tom-ன் வழக்கறிஞர் Jonathan Flattery கூறுகையில், சோனி நிறுவனம் சம்பவத்துக்கு பொறுப்பேற்க மறுக்கிறது.

பாதிப்படைந்த செல்போனில் வேறு பேட்டரியை பொருத்தினால் அது வேலை செய்வதாக நிறுவனம் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சோனி நிறுவனம் இன்னும் வெளிப்படையான அறிக்கையை வெளியிடவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்