பத்திரிகையில் வெளியான பிரித்தானிய இளவரசியின் நிர்வாணப்படம்: இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டனின் நிர்வாணப்படத்தை வெளியிட்ட பத்திரிகை ஒன்று இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

advertisement

அப்போது, நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு மேலாடை இல்லாமல் நின்றுக்கொண்டு இருந்தபோது Closer பத்திரிகையின் நிருபர் அவரை புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இளவரசியின் அனுமதி இல்லாமல் அந்த அரை நிர்வாணப்படம் பாரீஸில் வெளியாகும் குளோசர் பத்திரிகையில் அச்சிடப்பட்டது.

பத்திரிகையின் இந்த செயலால் அரண்மனைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக இளவரசர் வில்லியமும் இளவரசி கேட் மிடில்டனும் பத்திரிகை மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், பத்திரிகையின் இந்த அத்துமீறலுக்கு 1.5 மில்லியன் யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என கேட் மிடில்டன் கோரியுள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கின் இறுதி விசாரணை இன்று பாரீஸ் நீதிமன்றத்தில் நிகழ்ந்துள்ளது.

அப்போது, பிரித்தானிய இளவரசியின் அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட குளோசர் பத்திரிகை இளவரசிக்கு 1,03,000 யூரோ(1,86,72,810 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்