ஏலத்தில் விடப்பட்ட இளவரசி டயானாவின் பொருட்கள்: விலை என்ன தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

இளவரசி டயானா உபயோகப்படுத்திய பல முக்கிய பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசி டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் மறைந்தாலும், அவரின் புகழ் மக்கள் மனதை விட்டு மறையவில்லை.

இந்நிலையில், டயானா பயன்படுத்திய 78 பொருட்களை அமெரிக்காவின் RR ஏல நிறுவனம் ஏலத்தில் கொண்டு வந்துள்ளது.

நிறுவனத்தின் ஓன்லைன் ஏலம் வரும் 13ஆம் திகதி முடிகிறது. டயானா பயன்படுத்திய D என்ற எழுத்து பொறிக்கப்பட்ட நெக்லஸ், வெள்ளி பேக், சார்லஸ்-டயானா திருமணத்தின் போது வெட்டப்பட்ட கேக் துண்டு உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வரவுள்ளது.

வெள்ளியால் செய்யப்பட்ட பேக் $15,000-க்கும் அதிகமான தொகைக்கு விற்பனையாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதே போல நெக்லஸ் ஆபரணம் மற்றும் டயானா கையெழுத்திட்ட The Tale of Pigling Bland என்ற புத்தகம் முறையே $2,000-க்கு விற்பனை ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டயானாவின் பிரேஸ்லெட், சிறுவயதில் அவர் அணிந்த ஸ்வெட்டர் துணி, தனது மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹரியுடன் எடுத்து கொண்ட புகைப்படமும் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்