விற்பனைக்கு விடப்படும் பிரித்தானிய கடவுச்சீட்டு: திணறும் அதிகாரிகள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

சட்டவிரோத கும்பல்கள் அசல் பிரித்தானிய கடவுச்சீட்டுகளை மிகவும் குறைந்த விலையில் அகதிகளுக்கு விற்பனைக்கு விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய கடவுச்சீட்டுகளை ஐரோப்பாவில் குடியேறும் அகதிகளுக்கு மிகவும் குறைந்த விலையில், சுமார் 500 பவுண்டு விலையில் சட்டவிரோத கும்பல் விற்பனைக்கு விடுவதாக தெரிய வந்துள்ளது.

சுமார் 20,000 கும் மேற்பட்ட தனிநபர் அடையாள தரவுகள் கருப்புச்சந்தையில் வெளியான நிலையில் சட்டவிரோத கடவிச்சீட்டுகளின் விலையும் கடுமையாக சரிந்துள்ளது.

இதனால் ஐ.எஸ் பயங்கரவாத ஆதரவு கும்பல் மிக எளிதில் பிரித்தானியா உல்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

ஐரோப்பாவில் இதுபோன்ற நடவடிக்கைகள் சமீப காலமாக மிகவும் மலிந்து காணப்படுவதாகவும், நாட்டின் எல்லை பாதுகாப்பு மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாகவும் பொலிஸ் தரப்பு கவலை தெரிவித்துள்ளது.

போலியான கடவுச்சீட்டினால் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதிலும் கடும் சிக்கல் எழுந்துள்ளது என தெரிவிக்கும் யூரோபோல் தலைமை அதிகாரி, இதுபோன்ற சட்டவிரோத கும்பலை எதிர்கொள்வதிலும் சிக்கல் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கடவுச்சீட்டு தணிக்கையின்போது 6,500 போலி ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக எல்லை பாதுகாப்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பாவில் மட்டும் போலி ஆவணங்களுடன் 11,000 புலம்பெயர்ந்தோர் குடியிருப்பதாக கூறும் அதிகாரிகள், அடுத்த ஆறு மாதங்களில் இதன் எண்ணிக்கை இருமடங்காக வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்