லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தினால் இருபது பேர் தற்கொலை முயற்சி

Report Print Vethu Vethu in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

மேற்கு லண்டனில் Grenfell அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பியவர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட 20 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பிரித்தானிய தொண்டு நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அந்த குடியிருப்பின் பல குடியிருப்பாளர்களின் மனங்களில் இருந்து அந்த தீ விபத்து காட்சிகள் இன்னமும் மறையவில்லை என Silence of Suicide founder என்ற நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தீ விபத்தில் காப்பாற்றப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவி செய்யும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல்களின் ஊடாக கிட்டத்தட்ட 20 பேர் தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்தது 30 ஆண்டுகளுக்கு அந்த மக்களுக்கு மனநல சுகாதார ஆதரவு தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் பலர் மது மற்றும் போதைப்பொருளை சார்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பலர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தினால் அதிர்ச்சிகரமான பல்வேறு நிலைகளை மக்கள் அடைந்துள்ளனர். மனச்சோர்வு, மனஅழுத்தம், கவலை மற்றும் சுயமாக தங்களை தாங்களே காயப்படுத்தி கொள்ளும் நிலையில் பலர் உள்ளனர்.

வெவ்வேறு நேரங்களில் எல்லோரும் பாதிக்கப்படுவார்கள். குறைந்த பட்சம் அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு நீண்டகால மனநல சுகாதார வசதி அவர்களுக்கு தேவைப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அன்பான உறவுகளை இழந்த சோகத்தினை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.

மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசர ஆலோசனை தேவைப்படுகின்றது.

எரியுடன் கட்டத்தில் இருந்து கீழே விழுந்த தங்கள் உறவினர்களை பலர் நேரில் கண்டனர். பல சிறுவர்கள் அங்கு இருந்தனர். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கண் முன்னே எரிந்து மரணித்தனர். இந்த இழப்புகளே தற்கொலைக்கு தூண்டியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜுன் மாதம் 14ஆம் திகதி அதிகாலையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக 80 பேர் உயிரிழந்ததுடன் 70 பேர் காயமடைந்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்