பள்ளிக்கு சென்ற பிரித்தானியாவின் குட்டி இளவரசர்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ் இன்று தனது தந்தையுடன் Primary School-க்கு சென்றுள்ளார்.

இன்று தான் அவர் Primary School-க்கு செல்லும் முதல் நாளாகும், லண்டனில் உள்ள THOMAS’S BATTERSEA என்ற பள்ளிக்கு தனது தந்தையுடன் நீல நில பள்ளி சீருடை அணிந்து சென்றுள்ளார்.

தாய் கேட் மிடில்டனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வரமுடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பள்ளிக்குள் சென்றதும் Primary School வகுப்புகளின் தலைமை ஆசிரியை HELEN HASLEM, இளவரசருக்கு கைகுலுக்கி வரவேற்றுள்ளார்.

பள்ளி வருகைபதிவேட்டில் இளவரசரின் பெயர் ‘George Cambridge’ என குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகி தாமஸ் கூறியதாவது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, எங்கள் பள்ளியில் தனிப்பட்ட நபருக்காக நாங்கள் எதுவும் பின்பற்றவில்லை.

இளவரசர் தனது தனித்தன்மையான பண்பின் மூலம் அனைவரிடமும் பழகுவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்