தான் உயிரிழந்த நிலையில் எட்டு பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி: நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக உயிரிழந்த சிறுமியின் உடலுறுப்புகள் 8 பேரின் உடலில் பொருத்தப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Somerset கவுண்டியை சேர்ந்தவர் Harvey, இவரது மனைவி Sophy Layzell. இவர்களுக்கு Amelia மற்றும் Jemima (13) என இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

கடந்த 2012-ல் திடீரென மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் Jemima உயிரிழந்தார். இறப்பதற்கு ஒருவாரம் முன்னர் உடலுறுப்பு தானம் குறித்து Jemima-ன் குடும்பத்தினர் அவரிடம் சாதாரணமாக பேசி கொண்டிருந்தனர்.

அதுவரை உடலுறுப்பு தானம் குறித்த அடிப்படை விடயங்கள் கூட தெரியாமல் இருந்த Jemima-வுக்கு, குடும்பத்தினர் அது குறித்து கூறிய பின்னர் அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது.

இது நடந்த அடுத்த நான்கு நாட்களில் Jemima திடீரென வீட்டில் மயங்கி விழ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சில நாட்களில் மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவால் உயிரிழந்தார்.

இதையடுத்து Jemima-வின் விருப்பபடியே அவரின் இதயம், இரண்டு சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், சிறு குடல், கணையம் ஆகியவை பல்வேறு நோயாளிகளின் உடலில் பொருத்தப்பட்டது.

இதோடு, Jemima-வின் கண்களிலிருந்து எடுக்கப்பட்ட திசுக்கள் இருவர் கண்ணில் பொருத்தப்பட்டது.

இதன்மூலம் எட்டு பேரின் உயிரை Jemima காப்பாற்றியுள்ளார். இந்த விடயம் தற்போது வெளியில் தெரியவந்துள்ள நிலையில், பிரித்தானியாவில் உடலுறுப்பு தானம் மூலம் எட்டு பேரின் உயிரை காப்பாற்றிய முதல் நபர் என்ற பெருமையும் மறைந்த Jemima-வுக்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து Jemima-வின் தாய் Sophy கூறுகையில், தங்கள் பிள்ளை சிறப்பாக வாழ வேண்டும் என்று தான் எல்லா பெற்றோரும் விரும்புவார்கள், ஆனால் அதையும் மீறி Jemima எங்களை பெருமைப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்