ஐரோப்பியாவிலிருந்து பிரித்தானியா விலகுவற்கு வலுக்கும் எதிர்ப்பு: ஸ்தம்பித்தது லண்டன்

Report Print Basu in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரத்தானியா விலகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகர் லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலே நீடிக்க வேண்டும் என முழக்கமிட்ட பல்லாயிரக்கணக்கான போராட்டகாரர்கள். லண்டனில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்றுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியுடன், பிரித்தானியா விலகுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முழக்கங்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகள், சட்டைகளை அணிந்திருந்த போராட்டகார்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான முழக்கங்களை முழங்கியவாறு பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றுள்ளனர்.

லண்டனில் நடந்த இந்த போராட்டத்தில் கிட்டதட்ட 50,000 பேர் கலந்து கொண்டதாக அமைப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

எதிர்வரும் தினங்களில் பிரித்தானியா பாராளுமன்றத்தில், ஐரோப்பிய ஒன்றிய பின்வாங்கல் சட்ட மசோதா மீதான பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரத்தானியா விலகுவதற்கு ஆதரவாக செயல்படுவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்