மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ள பிரித்தானிய இளவரசியின் உருக்கமான விருப்பம்

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் தனது மூன்றாவது குழந்தையை அரண்மனையிலேயே பிரசவம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளவரசரான வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தம்பதிக்கு ஏற்கனவே ஜோர்ஜ் மற்றும் சார்லோட் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள St Mary’s மருத்துவமனையில் பிறந்தவர்கள்.

இரண்டாவது முறையாக இளவரசி கேட் மிடில்டன் பிரசவம் ஆனபோது அரண்மையிலேயே பிரசவம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரசவம் ஆபத்தின்றி நிகழ வேண்டும் என்பதற்காக அவருடைய விருப்பம் நிராகரிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போதைய மகாராணியான இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 4 பிள்ளைகளையும் பங்கிங்காம் அரண்மையில் தான் பிரசவம் செய்தார்.

இவருக்கு முன்னதாக மகாராணியாக இருந்த விக்டோரியாவும் கென்சிங்டான் அரண்மனையில் தான் பிரசவம் செய்தார்.

எனவே, தன்னுடைய இரண்டு விருப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது குழந்தையை அரண்மனையிலேயே பெற்றுக்கொள்ள இளவரசி கேட் மிடில்டன் உறுதியாக முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இதுக் குறித்து அரண்மனை வட்டாரங்கள் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்