பிரித்தானிய சாலை விபத்தில் 7 தமிழர்கள் பலி: லொறி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

பிரித்தானிய நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உள்பட 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக இரண்டாவது லொறி ஓட்டுனர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

இங்கிலாந்திற்கு தமிழகத்தை சேர்ந்த 7 பேர் சுற்றுலா சென்றபோது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

advertisement

இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக 7 பேரும் மினி பேருந்து ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 26-ம் திகதி பயணமாகியுள்ளனர்.

இந்நிலையில், Newport Pagnell என்ற இடத்திற்கு அருகில் பேருந்து சென்றுக்கொண்டு இருந்தபோது இரண்டு லொறிகள் அதன் மீது பயங்கரமாக மோதியது.

விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மினி பேருந்து ஓட்டுனர் மற்றும் அதில் பயணம் செய்த 7 தமிழர்களும் பலியாகினர்.

இரண்டு லொறி ஓட்டுனர்களும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து முதல் லொறி ஓட்டுனரான Ryszard Masierak(31) என்பவர் மீது 20 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இரண்டாவது லொறி ஓட்டுனரான David Wagstaff(53) என்பவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

அப்போது, ஓட்டுனரின் வழக்கை விசாரணை செய்த பின்னர் அவர் மீது 12 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டது.

எனினும், சில நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு பெயில் வழங்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம்

மினிபேருந்து ஓட்டுனர் சிரியாக் ஜோசப்(52)
ரிஷி ராஜீவ்குமார்(27)
விவேக் பாஸ்கரன்(26)
கார்த்திகேயன் புகலூர் ராமசுப்ரமணியன்(33)
பன்னீர் செல்வம் அண்ணாமலை(63)
சுப்ரமணியன் அறச்செல்வன்(58)
லான்வன்யாலக்ஷிமி சீதாராமண்(33)
தமிழ்மணி அறச்செல்வன்(50)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்