லண்டனில் போராட்டத்தில் குதித்த தமிழர்கள்

Report Print Basu in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

மாணவி அனிதா தற்கொலையை அடுத்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வை எதிர்த்து லண்டனில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் கடல் கடந்து பிரித்தானியா வரை பரவி உள்ளது.

advertisement

பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பிரித்தானியா வாழ் தமிழர்கள் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தபடி நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பது அவர்களின் கருத்தாகும். கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் திணிக்கக்கூடாது என்று இந்திய அரசை பிரித்தானியா வாழ் தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்