பெற்ற பிள்ளையை கொலை செய்த இளம்பெண்ணுக்கு சிறைத்தண்டனை

Report Print Fathima Fathima in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

இங்கிலாந்தில் குழந்தை பெற்றவுடன் பிளாஸ்டிக் பேக்கில் போட்டு ஜன்னல் வழியே வீசிய பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஸ்டாப்போர்டு கிரவுன் பகுதியில் கடந்தாண்டு பெண் குழந்தையொன்று பிளாஸ்டிக் பேக்கில் படுகாயமடைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

குழந்தையை கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குற்றவாளி என தெரியவந்தது.

காதலன் தன்னை ஏமாற்றிய நிலையில் குழந்தையை வளர்க்க விரும்பாததால் கொலை செய்ததாக குறிப்பிட்டார்.

மேலும் தான் கர்ப்பமாக இருப்பது பற்றி குடும்பத்தினருக்கு எதுவும் தெரியாததால் கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்ததுடன் பிளாஸ்டிக் பையில் போட்டு ஜன்னல் வழியே வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஸ்டாப்போர்டு கிரவுன் நீதிபதி மைக்கேல் சேம்ஸன் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்