ஆதரவற்ற 18 நபர்களை கொத்தடிமையாக நடத்திய குடும்பம்: 80 ஆண்டுகள் சிறை

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

பிரித்தானியாவில் ஆதரவற்ற 18 ஆண்களை கொத்தடிமைகளாக நடத்திய பிரபலமான குடும்பம் ஒன்றிற்கு 80 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக Rooney குடும்பம் ஆதரவற்ற ஆண்கள் 18 பேரை கொத்தடிமைகளாக நடத்தி வந்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

advertisement

இதனால் 1.5 மில்லியன் பவுண்டு அளவுக்கு வருவாய் ஈட்டியதாகவும், ஆனால் கொத்தடிமைகளாக இருந்த ஆதரவற்ற நபர்களுக்கு போதிய உணவு, உறவிடம், ஊதியம் எதையும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஈட்டிய வருவாயில் Rooney குடும்பம் மிகவும் சொகுசாக வாழ்ந்து வந்ததாகவும், பல நாடுகளுக்கு உல்லாச பயணங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.

பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய விசாரணையை இந்த விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் Rooney குடும்பத்தைச் சேர்ந்த 10 ஆண்கள் மற்றும் ஒரு பெண்மணி உள்ளிட்ட மொத்த குடும்பத்தினருக்கு மொத்த 79 ஆண்டுகளும் 7 மாதமும் சிறை தண்டனை விதித்து நாட்டிங்ஹாம் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொத்தடிமைகளாக இருந்த அந்த 18 நபர்களையும் Rooney குடும்பம் கடுமையாக தாக்கி, உயிர் மீது பயத்தை ஏற்படுத்தி வைத்திருந்ததாகவும், மனிதக் கழிவுகள் நிரம்பிய பகுதியில் இரவு படுக்க வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதில் பெரும்பாலானவர்களுக்கு அரசு வழங்கிய உதவித்தொகை மொத்தமும் Rooney குடும்பமே அபகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்