பிரித்தானியாவில் புதிய 10 பவுண்ட் கரன்சி வெளியானது

Report Print Fathima Fathima in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் நேற்று முதல் உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியை ஜேன் ஆஸ்டென் உருவப்படம் பொறித்த கரன்சி நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

கரன்சியின் பின்புறத்திலும் புத்தக வாசிப்பை போற்றும் விதமாக ஜேன் ஆஸ்டெனின் வாசகம் இடம்பெற்றுள்ளது.

மேலும் கண்பார்வையற்றவர்களும் எளிதில் பயன்படுத்தும் வண்ணம் கரன்சியில் பிரெய்லி புள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நூறு கோடி மதிப்பிலான புதிய 10 பவுண்டு கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன, இதில் ஏஏ01 0000001 வரிசை எண் கொண்ட முதல் நோட்டு எலிசபெத் மகாராணிக்கு வழங்கப்பட்டது.

புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த போதும், சார்லஸ் டார்வின் உருவம் பொதித்த பழைய நோட்டுகள் 2018 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்