பிரெக்சிற்: நம்பிக்கை குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தகவல்

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
பிரெக்சிற்: நம்பிக்கை குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தகவல்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரெக்சிற் விவகாரத்தை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே கையாளும் விதம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்து வருவதாக கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

சர்வதேச அமைப்பான ஓ.ஆர்.பியும் ரெலிகிராப் ஊடகமும் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலமே இது தொடர்பில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்து செல்லும் விவகாரம் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்தின் பேச்சுவார்த்தையில் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இது தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தற்போதைய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடந்த செப்டெம்பரில் சர்வதேச அமைப்பான ஓ.ஆர்.பி நடத்திய கருத்துக்கணிப்பில், பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் 45 சதவீதமான மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

அப்போது, பிரெக்சிற் பேச்சுவார்த்தை மூலம் பிரதமர் தெரேசா மே சரியான தீர்வைப் பெற்றுத்தருவார் என்று பிரித்தானிய மக்கள் நம்பிக்கை வைத்திருந்ததாக தெரியவந்தது.

ஆனால், ஓ.ஆர்.பியினால் நடத்தப்பட்ட தற்போதைய கருத்துக்கணிப்பின் மூலம் இந்த நம்பிக்கை குறைந்துள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளது. பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரேசா மே கையாளும் விடயம் தொடர்பில மக்கள் நம்பிக்கையீனத்தைக் கொண்டுள்ளதாக தற்போதைய கருத்துக்கணிப்புக் கூறுகின்றது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்