பிரெக்சிற் தொடர்பில் மற்றொரு வாக்கெடுப்பு? பிரித்தானிய பிரதமர் தெரேசா மே

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரெக்சிற் தொடர்பில் மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என பிரதமர் தெரேசா மே திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பிரித்தானிய ஊடகமொன்றுக்கு பிரதமர் மே நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செவ்வியின் போது, பிரெக்சிற் தொடர்பில் மற்றுமொரு வாக்கெடுப்பு நடத்தப்படின், நீங்கள் பிரெக்சிற்றிற்கு ஆதரவாக வாக்களிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தொடர்ந்து பதிலளித்த பிரதமர், ”இவ்வாறான அனுமான கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. நான் பிரெக்சிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தேன்.

அதன்படி, அதற்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு, அவர்கள் கேட்டதை வழங்குவதே எனது கடமை.

இந்நிலையில், பிரெக்சிற் மீதும், சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்