இளவரசர் வில்லியம், கேட் தம்பதியருக்கு பிறக்கவிருக்கும் குழந்தை இப்படிதான் இருக்குமாம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியரின் மூன்றாவது குழந்தை எப்படி இருக்கும் என்பது குறித்து தடயவியல் கலைஞர் ஒருவர் 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள தடயவியல் கலைஞர் ஜோ முல்லின்ஸ் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் புகைப்படங்களை கூர்மையாக ஆராய்ந்த பின்னர், அதேபோன்று அவர்களது 2 குழந்தைகளின் புகைப்படங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் புதிய புகைப்படங்களை வடிவமைத்ததாக ஜோ முல்லின்ஸ் தெரிவித்துள்ளார்.

இளவரசி கேட் மிடில்டனுக்கு பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பது குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில் ஜோ முல்லின்ஸ் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் இருக்கும் குழந்தைகள் நீல வண்ண கண்களுடன் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சாத்தியமாகியிருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறித்த புகைப்படத்தை உருவாக்கியுள்ளதாக கூறும் ஜோ முல்லின்ஸ், இது முழுக்க முழுக்க கற்பனையே எனவும், இது தடயவியல் நுணுக்க உச்சத்தின் வெளிப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்