ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு பேச்சுவார்த்தை நிறைவுசெய்யப்படும்: மே

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு பேச்சுவார்த்தை நிறைவுசெய்யப்படும்: மே
0Shares
0Shares
lankasri.com

ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு குறித்த உடன்பாடொன்றுடனேயே பிரெக்சிற் பேச்சுவார்த்தை நிறைவுசெய்யப்படும் என பிரதமர் தெரேசா மே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாராந்த கேள்வி நேரத்தின் போதே பிரதமர் மே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”உடன்பாடு எட்டப்படாத பேச்சுவார்த்தையை நாம் எதிர்பார்க்கவில்லை. நாட்டு மக்கள் நன்மையடையும் வகையிலான ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே நாம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

பிரித்தானியாவிற்கும், நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் ஏற்ற சிறந்த உடன்பாட்டை எட்ட முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதன்படி உடன்பாட்டுடன் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பேச்சுவார்த்தை நிறைவுசெய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்