நான் மிகவும் அழகானவள்: மணமகன் தேடும் 4 குழந்தைகளின் தாய்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

லண்டனை சேர்ந்த 44 பெண்மணி ஒருவர் தான் மிகவும் அழகாக இருப்பதால் தனக்கு ஏற்ற துணையை தேடிக்கொண்டிருப்பதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Dawn Cousins என்ற பெண்மணி 4 குழந்தைகளுக்கு தாய் ஆவார். இவர் லண்டனில் ஒளிபரப்பாகும் ITV daytime show - இல் கலந்துகொண்டு பேசியதாவது, எனக்கு தற்போது 44 வயதாகிறது.

ஆனால், நான் பார்ப்பதற்கு மிகவும் அழகானவள், எனது வயதில் பாதிதான் இருக்கிறேன். இதுவரை உண்மையான காதலனை நான் பார்க்கவில்லை.

அதனால் நான் யாரையும் திருமணமும் செய்துகொள்ளவில்லை. தற்போது என் வாழ்வில் உண்மையான காதலனை கண்டறிந்து அவருடன் கடைசிவரை வாழ வேண்டும் என நினைக்கிறேன்.

என்னை திருமணம் செய்துகொள்வதற்கான 3 காரணங்கள் இதோ

நான் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பேன், நான் மிகவும் இளமையானவள், மிகவும் மகிழ்ச்சியானவள் மட்டுமல்லாமல் 4 குழந்தைகள் இருப்பதால் அவர்களை வைத்துக்கொண்டு சிரமப்படமாட்டேன் என கூறியுள்ளார்.

என் வாழ்க்கையின் இரண்டாம் பகுதியை அனுபவிக்க வேண்டும், எனக்கு 44 வயதாகிவிட்டதால் நான் செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை.

மிகுந்த அன்பு கொண்ட ஒரு நபரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்