பிரித்தானியாவுடன் எதிர்கால வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தயார்

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
பிரித்தானியாவுடன் எதிர்கால வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தயார்
0Shares
0Shares
lankasri.com

பிரித்தானியாவுடன் பிரெக்சிற்றுக்கு பின்னரான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிக் கொண்டிருக்கின்ற போதிலும் அது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்துடன் விவாதிப்பதற்கு மறுக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளும் தங்களுக்குள் வர்த்தகம் தொடர்பில் விவாதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உள்வரைபு ஆவணம் ஒன்றின் மூலம் மேற்படி தகவல் தெரியவந்துள்ளது.

இந்த உள்வரைபு ஆவணம் இன்னமும் திருத்தம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த வரைபு அறிக்கை ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்கினால் 27 உறுப்பு நாடுகளுக்கும் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் டிசம்பரில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பிரெக்சிற் சட்டமூலத்தில் முட்டுக்கட்டை இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பிரெக்சிற் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர் கூறியிருந்த நிலையில் மேற்படி உள்வரைபு ஆவணம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்