லண்டனில் செயல்படும் உலகின் முதல் நிலத்தடி விவசாயப் பண்ணை

Report Print Fathima Fathima in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

உலகின் முதல் நிலத்தடி விவசாயப் பண்ணை லண்டனில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சாலைக்கு கீழே 120 அடியில் அமைந்துள்ள இந்த பண்ணை, இரண்டாம் உலகப் போரின் போது வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முகாம்களாக இருந்துள்ளன.

தற்போது செயற்கையான எல்இடியின் சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தி சிறிய வகை செடிகள் மற்றும் தானியங்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

நீரியல் வளர்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இச்செடிகள் வளர்க்கப்படுவதால் மண்ணுக்கு வேலை கிடையாது.

விதைகள் முளைத்து அறுவடைக்கு தயாராக முப்பது நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் லண்டனில் உள்ள உள்ளூர் உணவகங்கள் மற்றும் சந்தைகளிலேயே விற்கப்படுகின்றன.

உலகளவில் மக்கள்தொகை அதிகரிக்கும் போது இதுபோன்ற விவசாயப் பண்ணைகள் பல நகரங்களில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்