பிரித்தானியாவில் போர்நிறுத்த நினைவு தினம்: மகாராணி பங்கேற்பு

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

பிரித்தானியாவில் முதல் உலகப்போர் நிறைவு பெற்றதையும், அதில் பலியான வீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவு தினமும் இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது.

முதல் உலகப்போரில் பங்கேற்ற பிரித்தானிய வரலாறு காணாத அளவில் உயிரிழப்பையும் பொருளாதார இழப்பையும் சந்தித்தது.

ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் போர் நிறத்தம் ஏற்பட்டதால் ‘99-ம் ஆண்டு ஞாயிறு நினைவு தினம்’ இன்று அனுசரிக்கப்பட்டது.

லண்டனில் உள்ள Cenotaph பகுதியிலும் மற்றும் பிக் பென் கடிகாரம் அமைந்துள்ள பகுதியிலும் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் இளவசர் சார்லஸ் பங்கேறுள்ளார்.

மகாராணியான இரண்டாம் எலிசபெத் பால்கனியில் இருந்தவாறு உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரித்தானிய நேரப்படி, காலை 11 மணியளவில் இந்த அஞ்சலி சுமார் 2 நிமிடம் செலுத்தப்பட்டது.

யுத்தத்தில் பலியான 1,400 வீரர்களுக்கு இந்நிகழ்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணுவ வீரர்கள் முதலாம் உலகப்போர் சீருடைகளை அணிந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மகாராணி, இளவரசர் சார்லஸ் மட்டுமின்றி பிரதமரான தெரசா மேயும் இந்த அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று மலர் வளையம் வைத்து உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்