பிரித்தானியாவில் விசாரணை அதிகாரிகளுக்கு லஞ்சம்: 7 பேர் மீது அதிரடி நடவடிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் 7 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் 88 வயது பெண்மணி ஒருவரை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் 2 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சிக்கிய இருவரையும் விடுவிக்கும் வகையில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறி லீட்ஸ் கிரவுன் நீதிமன்ற வளாகத்தில் 5 ஜூரிகளுக்கு லஞ்சம் தர முன்வந்துள்ளனர்.

இதில் தொடர்புடைய 7 பேரை கைது செய்து விசாரித்த நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், தொடர்புடைய ஏழு பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இதில் கொலை வழக்கு குற்றவாளிகளான ராஜா ஹுசைன் மற்றும் ஜோனாதே ஹுசைன் ஆகிய இருவருக்கும் கொலை குற்றத்திற்காக மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கு ஒன்றில் விசாரணை அதிகாரிகளுக்கே லஞ்சம் தர முயன்ற விவகாரம் மிகவும் கண்டிக்கத்தக்க செயல் எனவும், உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த விவகாரத்தை முறியடித்துள்ளது வரவேற்கத்தக்கது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்