உலகின் மிக வேகமான ஜெட் பேக் மூலம் வானில் பறந்து பிரித்தானியாவை சேர்ந்த நபர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பிரித்தானியாவின் Gravity Industries நிறுவனரான ரிச்சர்ட் ப்ரௌனிங் என்பவரே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவர் வடிவமைத்துள்ள ஜெட் பேக்கில், ஆறு எரிவாயு கலன்கள் உள்ளன, ஒவ்வொன்றும் 22 கிலோ வரையிலான சக்தியை வெளிப்படுத்தக்கூடியது.
மனிதனின் கட்டுப்பாட்டில் மட்டுமே செயல்படும் இந்த ஜெட்பாக்கில் மணிக்கு 51.53 கி.மீ வேகத்தில் பறக்கலாம்.
இதனை உடலில் மாட்டிக் கொண்டு சுமார் 100 மீற்றர் உயரத்துக்கு ரிச்சர்ட் பறந்து காட்டினார், இதனை கின்னஸ் சாதனை பதிவாளரான பிரவின் படேல் உறுதி செய்து கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.
இந்நிலையில் தனது படைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.