பிரித்தானிய இளம்பெண் கம்போடியாவில் உயிரிழப்பு: தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளம்பெண் தமது கனேடிய நண்பருடன் சுற்றுலா சென்ற இடத்தில் உயிரிழந்த நிலையில் அவரது தாயார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய இளம்பெண் Natalie Seymour(22) தமது கனேடிய தோழியான Abbey Amisola என்பவருடன் கம்போடியா நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்த நிலையில் தமது தாயாருடன் கடைசியாக பேசிய அவர் ஃபுட் பாய்சன் காரணமாக தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்து எடுத்துக்கொள்ள வெளியே செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் பின்னர் தமது மகள் மற்றும் அவரது தோழி ஆகிய இருவரிடம் இருந்தும் எந்த தகவலும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கள் அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் Wendy Bowler தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்கிய ஹொட்டேல் நிர்வாகி, இருவரையும் மருத்துவரை சந்தித்து மருந்து எடுத்துக் கொள்ள கூறியதாகவும், ஆனால் இருவரும் தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வதாக கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் அதன் பின்னர் இருவரும் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கம்போடியாவில் இருந்து உடல்களை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால் 3 நாட்கள் ஆகும் எனவும் இளம்பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்