குள்ளமாக இருப்பதால் தண்டனையிலிருந்து தப்பித்த பாலியல் குற்றவாளி: நடந்தது என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா
594Shares
594Shares
lankasrimarket.com

பேஸ்புக் மூலம் இரண்டு சிறுமிகளிடம் தகாத முறையில் பேசிய இளைஞர் குள்ளமாக இருப்பதால் சிறை தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.

வேல்ஸின் Welshpool நகரை சேர்ந்தவர் Bryan Anthony Bowen (26), இவர் பேஸ்புக் மூலம் 13 மற்றும் 15 வயதான இரண்டு சிறுமிகளிடம் பாலியல் ரீதியான விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து சிறுமி ஒருவர் பொலிசில் புகார் செய்ய பொலிசார் Bryan-ஐ கைது செய்தனர். Bryan மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், முதலில் 48 வாரம் சிறைத்தண்டனை அவருக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறைத்தண்டனையை ரத்து செய்து நீதிபதி தற்போது தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி Rhys Rowland கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட Bryan குள்ளத்தன்மை உடைய ஊனமானவராக உள்ளார்.

உடல் சிறியதாக உள்ளதோடு உணர்ச்சியற்றவராகவும் காணப்படுகிறார், இதனால் சிறைக்கு சென்றால் Bryan கடினமான நிலையை சந்திக்க நேரிடும்.

இதனால் அவருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.

ஆனால் Bryan பாலியல் குற்றவாளி என பத்து வருடங்களுக்கு அவர் பெயர் பதிவேட்டில் இடம் பெறவேண்டும் என Rhys தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்