பிரித்தானியா வான்வெளியில் தோன்றிய மர்ம பாதை!

Report Print Kabilan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

பிரித்தானியா வான்வெளியில் தோன்றிய மர்ம பாதை தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

37 வயது மதிக்கத்தக்க Rachel Nason என்ற பெண் இதனை வீடியோவாக எடுத்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30 மணியளவில் தன்னுடைய வீட்டிலிருந்து வானில் வினோத மாற்றம் ஏற்படுவதை கவனித்துள்ளார்.

மேகக்கூட்டங்கள் ஒன்றாக சேர்ந்து வானத்தை நோக்கி செல்வது போன்று இருந்துள்ளது, உடனடியாக இதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உலக அழிவிற்கான எச்சரிக்கை, நாளை உலகின் முடிவாக இருக்கலாம் என பதிவிட்டார்.

சிறிது நேரத்திலேயே வைரலாக பரவவே, Planet X பூமியுடன் வந்து மோதப் போவதற்கான அறிகுறி என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

முப்பது நிமிடங்களில் வானம் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் சிலர் விமான விபத்தினாலோ அல்லது விண்கற்கள் விழுந்ததன் விளைவாகவோ இது தோன்றியிருக்கலாம் எனவும் கூறிவருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்