2020-ல் இந்த நோயால் தான் அதிக உயிரிழப்பு ஏற்படும்: மருத்துவர்கள் பகீர் தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

2020-ம் ஆண்டில் கல்லீரல் நோயின் மூலம் ஏராளமானோர் உயிரிழக்கும் ஆபத்து உருவாகும் என லண்டன் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகில் தற்போது எய்ட்ஸ் மற்றும் புற்று நோய்க்கு அடுத்தபடியாக இருத நோய் தான் பெரிய உயிர்க் கொல்லியாக உள்ளது.

இதைவிட மிகப்பெரிய உயர்க்கொல்லி நோயாக கல்லீரல் நோய் சத்தமின்றி அமைதியாக உருவாகி வருவது லண்டன் மருத்துவர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிக அளவில் மதுகுடித்தல் மற்றும் உடல்பருமன் போன்றவைகளால் கல்லீரல் நோய் ஏற்படுகிறது.

2020-ம் ஆண்டில் கல்லீரல் நோயின் மூலம் ஏராளமானோர் உயிரிழக்கும் ஆபத்து உருவாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதாவது, இக்காலகட்டத்தில் இதய நோயினால் 76 ஆயிரம் பேர் மரணம் அடையும் பட்சத்தில் கல்லீரல் நோய் மூலம் 80 ஆயிரம் பேர் பலியாவார்கள்.

இதன் மூலம் கல்லீரல் நோய் உயிர்க்கொல்லியாக மாறும் அபாயம் உள்ளது மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்