வருங்கால பிரித்தானிய இளவரசி மேகன் குறித்து யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மார்கலுக்கும் நடக்கவிருக்கும் திருமணம் தான் இன்று உலகளவில் பரபரப்பாக பேசப்படும் விடயமாக உள்ளது.

பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினராக ஆக போகும் மேகன் குறித்த சுவாரசிய தகவல்கள்

  • மேகன் என்பது அவரின் முதல் பெயர் கிடையாது. ரேச்சல் மேகன் மார்கல் என்பது தான் முழு பெயர். நடிகையானதால் இப்படி பெயரை மாற்றி கொண்டார்.
  • அமெரிக்காவில் உள்ள வடமேற்கு பல்கலைகழகத்தில் மேகன் கடந்த 2003-ஆம் ஆண்டு தகவல்தொடர்பு துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
  • இளவரசர் ஹரியும், மேகனும் தூரத்துச் சொந்தமாம். 15 தலைமுறைகளுக்கு முன்பு மேகனின் தந்தை வம்சம் ராஜ குடும்பத்துக்குச் சொந்தக்காரர்களாம்.
  • மேகனுக்கு இது முதல் திருமணம் கிடையாது. ஏற்கனவே கடந்த 2011-ல் திரைப்பட தயாரிப்பாளர் டிரிவர் இங்கேல்சன் என்பவரை ஜமைக்காவில் மேகன் திருமணம் செய்தார். பின்னர் இரண்டாண்டுகளில் கணவரை பிரிந்துவிட்டார்.
  • அமெரிக்க தந்தைக்கும் ஆப்பிரிக்க தாய்க்கும் பிறந்தவர் மேகன். சூட்ஸ் என்ற அமெரிக்கத் தொடர்மூலம் இவர் பிரபலம் ஆனார்.
  • வனப்பெழுத்து என்னும் எழுதும் கலையில் (calligrapher) சிறந்து விளங்கும் மேகன் அதை தொழில்முறை வேலையாகவே முன்னர் செய்துள்ளார்.
  • இரண்டாம் எலிசபெத் பிரித்தானிய மகாராணி மட்டுமல்ல, சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் தலைவர் என்ற பொறுப்பையும் வகிப்பவர், விவாகரத்து ஆனவர்களின் திருமணங்கள் ஊக்குவிக்கப்படமாட்டாது என்பதால் ஏற்கனவே விவாகரத்து ஆன மேகன் திருமணத்தில் இவர் கலந்துகொள்வது சந்தேகம் தான்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்