பிரித்தானியாவில் வறுமையில் தவிக்கும் 14 மில்லியன் மக்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 14 மில்லியன் மக்கள் வறுமையில் வாடிவருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று அம்பலமாகி புயலை கிளப்பியுள்ளது.

பிரித்தானியாவில் அப்பாவி மக்களின் வறுமையை போக்குவதே தமது அரசியல் கடமை என கடந்த ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பிரதமர் தெரேசா மே உறுதிபட தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆண்டு வெளிவந்துள்ள ஆய்வறிக்கை மே அரசின் செயல்படாத நிலையை

வெளிச்சமிட்டு காட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

குறித்த ஆய்வறிக்கையில், 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளை விட பிரித்தானியாவில் வறுமை நிலை அதிகரித்துள்ளதாகவும், சுமார் 400,000 சிறுவர்களும், 300,000 இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒட்டுமொத்தமாக பிரித்தானியாவில் 1.9 மில்லியன் முதியவர்கள் உள்ளிட்ட 14 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக அந்த ஆய்வறிக்கை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

நாட்டில் வறுமை நிலை அதிகரித்திருப்பது அரசின் தோல்வியையே சுட்டிக்காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்